ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு!

அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை இந்தியா கையாண்டுள்ளது என இந்தியாவின் நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு!

அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை இந்தியா கையாண்டுள்ளது என இந்தியாவின் நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பப்பெறப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், இதற்கான தீர்மானத்திற்கும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ள பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. மும்பைத் தாக்குதலுக்கு காரணமான முக்கிய தீவிரவாதி சிறையில் இருந்த நிலையில் அவரை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. 

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமடைய இருநாடுகளும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை இந்தியா கையாண்டுள்ளது.

இந்த இரு நாடுகளும் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் ரஷ்யா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும்" என்று செய்தி வெளியிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP