ஓலா, உபேர் டாக்சிகள் விலை உயர்வு: மத்திய அமைச்சருக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை!!

ஓலா மற்றும் உபேர் டாக்ஸிகளின் விலை உயர்வு 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஆர்.எஸ்.எஸ்-ன் சுதேசி ஜாக்ரான் மன்ச், மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
 | 

ஓலா, உபேர் டாக்சிகள் விலை உயர்வு: மத்திய அமைச்சருக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை!!

ஓலா மற்றும் உபேர் டாக்ஸிகளின் விலை உயர்வு 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஆர்.எஸ்.எஸ்-ன் சுதேசி ஜாக்ரான் மன்ச், மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் பொருளாதாரப் பிரிவான சுதேசி ஜாக்ரான் மன்ச், ஓலா மற்றும் உபர் போன்ற பயன்பாட்டு டாக்ஸிகளின் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை பற்றி சில கோரிக்கைகளை முன்வைத்து மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், மிக முக்கியமான 4 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் பொருளாதாரப் பிரிவு.

1. டாக்ஸிகளின் உயர்வு விலை 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.

2. டாக்ஸி ஓட்டுநர் சவாரியை ரத்து செய்தால், வாடிக்கையாளர்களின் கணக்கில் 100 ரூபாயோ அல்லது பயணக்கட்டணத்தில் 20 சதவீத சமமான தொகையையோ வரவு வைக்க வேண்டும்.

3. முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்யப்பட்ட முன்பதிவு பயணிகளுக்கு விலை அதிகரிப்பு தேவையில்லை. 

4. அவசர காலங்களில், வாடிக்கையாளர்களுக்கான அடிப்படை சேவை மற்றும் பயன்பாட்டு அம்சங்கள் வழங்கப்பட வேண்டும். 

இது குறித்து சுதேசி ஜாக்ரான் மன்ச் தலைவர், டாக்டர் அஸஷ்வானி மகாஜன் கூறுகையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மோட்டார் வாகன சட்டம் 2019இன் கீழ், பயன்பாட்டு டாக்ஸிகளுக்கான விதிமுறைகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறைந்த விலை மற்றும் வசதியான சேவைகளை வழங்குவதற்கென்றே 2014-15ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் சேவையை தொடங்கிய ஓலா மற்றும் உபேர் டாக்ஸிகள், விலையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டத் துவங்கிவிட்டதை தொடர்ந்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக டாக்டர் அஸஷ்வானி மகாஜன் கூறியுள்ளார்.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP