சபரிமலை கலவரத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்: கேரள முதல்வர் கடும் குற்றச்சாட்டு!

சபரிமலையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளே காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 | 

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று போலீசார் தடியடி நடத்த, போராட்டக்காரர்கள் கல் வீச அப்பகுதி கலவரமானது. 

இந்நிலையில் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரளாவில் நடைபெறும் போராட்டத்திற்கும், சபரிமலை பகுதியில் நடைபெறும் பிரச்னைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளே காரணம். இவர்கள் இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுவதால் பின்தங்கிய வகுப்பினரும் சபரிமலைக்கு செல்வது தடுக்கப்படும். சபரிமலையை கலவர பூமியாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது. சபரிமலை தனித்துவமான ஒரு இடம்.அந்த இடத்தின்தனித்துவத்தை அழிக்க முயல்கின்றனர். அதேபோன்று சபரிமலையில் செய்திகளை திரட்ட செல்லும் பெண் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP