ரூ.550 நாணயம் வெளியீடு: மத்திய அரசு அறிவிப்பு

சீக்கிய குரு, குருநானக் தேவின், 550 வது பிறந்த ஆண்டை நினைவுகூறும் வகையில், 550 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, வரும் நவம்பரில், இந்த நாணயம் வெளியாக உள்ளது.
 | 

சீக்கிய மதத்தினரின் ஆதி குருவான, குருநானக் தேவின், ஜெயந்தி விழாவை, சீக்கியர்கள் கோலாகலமாக கொண்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு குருநானக் தேவின், 550வது ஜெயந்தி விழாவை, சிறப்பாக கொண்டாட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அதற்காக, அரவை கௌரவிக்கும் வகையில், 550 ரூபாய் நாணயத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒப்புதலும், மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. நாணயத்தின் ஒருபுறம், குருத்துவாராவும், அதில், குருநானக் தேவ் 550 என்ற வாசகமும், மறுபுறம், சிங்க முகங்களுடன் கூடிய அசோக சின்னமும், பாரத், இந்தியா என்ற வாசகங்களும் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நாணயம், வரும், நவம்பரில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP