வீர மரணம் அடைந்தோர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: ஆந்திர முதல்வர் அறிவிப்பு

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி வீரமரணம் அடைந்த அனைத்து, சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்தாருக்கும், 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
 | 

இது குறித்து, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ‛‛ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவப்படையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

பயங்கரவாதத்தை எந்த உருவிலும், எந்த வகையிலும் ஏற்க முடியாது. நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு, வீர மரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் குடும்பத்தாருக்கும், 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். 

பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், ஆந்திர அரசும், தெலுங்கு தேசம் கட்சியும் துணை நிற்கும்’’என அவர் பேசினார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP