ரூ. 2 லட்சம் கோடி வங்கிப் பண மாேசடி: ஆர்.பி.ஐ., அதிர்ச்சி ரிபோர்ட்

கடந்த, 11 ஆண்டுகளில், இந்திய வங்கிகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாேசடிகள் நடந்துள்ளதாகவும், அதன் மூலம், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மாேசடி செய்யப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
 | 

ரூ. 2 லட்சம் கோடி வங்கிப் பண மாேசடி: ஆர்.பி.ஐ., அதிர்ச்சி ரிபோர்ட்

கடந்த, 11 ஆண்டுகளில், இந்திய வங்கிகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாேசடிகள் நடந்துள்ளதாகவும், அதன் மூலம், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மாேசடி செய்யப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆர்.பி.ஐ., எனப்படும், ரிசர்வ் வங்கி அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‛கடந்த, 2008 - 2009 நிதயாண்டு முதல், 2018 - 2019 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், இந்திய வங்கிகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாேசடிகள் நடந்துள்ளன. 
மிகத்துல்லியமாக கூறவேண்டுமென்றால், இந்த காலகட்டத்தில், 53,334 மாேசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன் மூலம், 2.05 லட்சம் கோடி ரூபாய் மாேசடி செய்யப்பட்டுள்ளது. 

இதில் அதிகபட்சமாகன தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், 6, 811 மாேசடி சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 5,033 கோடி ரூபாய் மாேசடி செய்யப்பட்டுள்ளது. 

இதே போல், எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், 6,793 மாேசடி சம்பவங்கள் மூலம், 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மாேசடி செய்யப்பட்டுள்ளது. எச்.டி.எப்.சி., வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் பேங்க், எஸ் பேங்க் என, பெரும்பாலான வங்கிகளில் மாேசடிகள் நடைபெற்றுள்ளன. 

தொகை அடிப்படையில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில், 28,700 கோடி ரூபாய் மாேசடி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மாெத்தம், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாேசடி சம்பவங்கள் மூலம், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி மாேசடி செய்யப்பட்டுள்ளது’ என, ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. 

2008 - 2014 வரையிலான கால கட்டத்தில் அதிகப்படியான மாேசடி சம்பவங்கள் நடைபெற்றதாகவும், 2014ம் ஆண்டுக்குப் பின், மாேசடி சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததுடன், பல மாேசடிகள் அம்பலமாகி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP