ஒடிசாவுக்கு மேலும் ரூ.1,000 கோடி நிவாரண நிதி: பிரதமர் மாேடி அறிவிப்பு

ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, ஏற்கனவே, 381 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், மேலும், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக, பிரதமர் நரேந்திர மாேடி அறிவித்துள்ளார்.
 | 

ஒடிசாவுக்கு மேலும் ரூ.1,000 கோடி நிவாரண நிதி: பிரதமர் மாேடி அறிவிப்பு


ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, ஏற்கனவே, 381 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், மேலும், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக, பிரதமர் நரேந்திர மாேடி அறிவித்துள்ளார். 

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், கடந்த 3ம் தேதி, ஒடிசாவின் புரியை ஒட்டி கரையை கடந்தது. இதில், ஒடிசாவின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர், முன்கூட்டியே அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இதன் காரணமாக பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனினும், புயலின் கோரத்தாண்டவத்தால், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று, ஒடிசா சென்ற பிரதமர் மாேடி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛மத்திய அரசுடன், மாநில அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, தொடர்ந்து ஆலோசிக்கிறது. மாநிலத்தில் புயல் தாக்குவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 381 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது, புயல் நிவாரணப் பணிகளுக்காக, மேலும், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்றார். 

புயல் பாதிப்புக்கு உள்ளான மக்களின் வாழ்வாதாரம் கருதி, புயலால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடும் முன்னரே, இடைக்கால நிவாரணமாக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின் மத்திய, மாநில அதிகாரிகள் குழு ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP