ரோகித் திவாாி கொலை வழக்கு- அபூா்வா திவாாிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் என்.டி. திவாரியின் மகன் ரோகித் சேகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி அபூா்வா திவாாியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், ரோஹித் தலையணையால் அழுத்தப்பட்டதில், மூச்சுத் திணறி இறந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது மர்ம மரணம் குறித்து டெல்லி போலீஸார் ரோஹித்தின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக என்.டி. திவாரியின் மருமகளை, அதாவது ரோஹித்தின் மனைவியான அபூர்வா திவாரியை, டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

குடும்ப வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து  அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அபூா்வா திவாாியை இன்று டெல்லி உயா்நீதிமன்றத்தில் போலீசாா் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கை விசாாித்த டெல்லி உயா்நீதிமன்றம் அபூா்வா திவாாியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP