கடல் நீர்மட்டம் உயர்வால் சென்னைக்கு ஆபத்து: ஐ.நா அறிக்கை

கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஐ.நாவின் சர்வதேச நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
 | 

சர்வதேச நிபுணர் குழு ஐ.நாவிடம் அளித்துள்ள அறிக்கையில், " இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம். சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய 4 முக்கிய நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், புவி வெப்பமயமாதலே கடல் வெப்பமடைவதற்கு காரணம் என்றும், கடல்நீர் மட்டம் உயர்வதால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள், சிறிய கடலோர கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP