ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி அமித் அகர்வால் தனது வேலையை ராஜினாமா செய்வதாக அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
 | 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி அமித் அகர்வால் தனது வேலையை ராஜினாமா செய்வதாக இன்று அதிகாரபூர்வமாக  அறிவித்துள்ளார்.

ஜெட்  ஏர்வேஸ் நிறுவனம், 2018 நவம்பர் மாதம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகத் தகவல் வெளியாகியது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸின் தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் பதவி விலகினர்.

அப்போது முதல் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் ஜெட் ஏர்வேஸ் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை ஏலத்தில் விற்கும் நடவடிக்கையை அந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் எஸ்பிஐ வங்கிக்குழுவின் மூலம் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஜெட் ஏர்வேசின் இணை தலைமைச் செயலதிகாரியும், தலைமை நிதி அதிகாரியுமான அமித் அகர்வால், அந்த நிறுவனத்திலிருந்து பதவி விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP