பிஎம்சி வங்கி வைப்பாளர்களுக்கான திரும்ப பெறும் வரம்பை உயர்த்தி உள்ள ரிசர்வ் வங்கி!!!

மும்பையின் ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வைப்பாளர்கள் சிலர் போராட்டம் மேற்கொண்டதை தொடர்ந்து, வைப்பாளர்களுக்கான திரும்ப பெறும் வரம்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
 | 

பிஎம்சி வங்கி வைப்பாளர்களுக்கான திரும்ப பெறும் வரம்பை உயர்த்தி உள்ள ரிசர்வ் வ

மும்பையின் ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வைப்பாளர்கள் சிலர் போராட்டம் மேற்கொண்டதை தொடர்ந்து, வைப்பாளர்களுக்கான திரும்ப பெறும் வரம்பை உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் தற்போதைய நிலை குறித்து முழு ஆய்வு மேற்கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி, அவ்வங்கி வைப்பாளர்களுக்கான திரும்ப பெறும் தொகையை சிறிது சிறிதாக உயர்த்தியதை தொடர்ந்து, தற்போதுள்ள வரம்பான 40,000 ரூபாயை 50,000 ரூபாயாக உயர்த்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, ரூ. 1000ஆக இருந்த அவ்வங்கியின் திரும்ப பெறும் தொகை வரம்பை ரூ.10,000 ஆக உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையில், வரம்பு தொகை போதவில்லை என்ற வைப்பாளர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 3ஆம் தேதியன்று, வரம்பை 25,000 ரூபாயாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.

அதன்பிறகு, கடந்த அக்டோப்ர் 13ஆம் தேதி, 25,000 ரூபாயை 40,000 ரூபாயாக உயர்த்த உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி, வைப்பாளர்களின் தற்போதைய போராட்டத்தை தொடர்ந்து, திரும்ப பெறும் தொகை வரம்பான 40,000 ரூபாயை 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP