மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!

நாடாளுமன்ற மக்களவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
 | 

மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!

நாடாளுமன்ற மக்களவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று 2வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றார். தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நம் நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 

இதைத்தொடர்ந்து அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை 

அமித் ஷா - உள்துறை அமைச்சர் 

நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து துறை, சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

சதானந்த கவுடா - ரசாயனம் மற்றும் உரம் 

நிர்மலா சீதாராமன்- நிதி அமைச்சர் மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை

ராம்விலாஸ் பஸ்வான் - நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகம். 

நரேந்திர சிங் தோமர் - வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து ராஜ் , கிராமப்புற மேம்பாடு

ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை 

ஹர்சிம்ரத் கவுர் - உணவு பதப்படுத்தல் 

தவார் சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் வளர்ச்சி துறை 

ரமேஷ் பொக்ரியால் - மனிதவள மேம்பாட்டு துறை 

அர்ஜுன் முண்டா - மலைவாழ் மக்கள் நலத்துறை

ஸ்ம்ரிதி இரானி - ஜவுளித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு 

ஹர்ஷ்வர்தன் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை 

பிரகாஷ் ஜவடேகர் - சுற்றுச்சூழல்துறை, வனத்துறை

பியூஷ் கோயல் - ரயில்வே, வர்த்தகம் & தொழில் துறை 

தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

சுப்பிரமணியம் ஜெய் சங்கர் - வெளியுறவுத் துறை 

முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மை நலத்துறை அமைச்சர் 

ப்ரல்ஹாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரத்துறை, நிலக்கரி 

மஹேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாடு

அரவிந்த் கன்னத் சாவந்த் -  பெரு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் 

கிரிராஜ் சிங் - கால்நடை மேம்பாடு, பால்வளம் மற்றும் மீன் வளம்

கஜேந்திர சிங் ஷெகாவத் - நீர் மேலாண்மை(ஜல் சக்தி)

மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP