விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் முழுவதும் மீட்பு!

விபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தில் பயணம் செய்த 6 பேரின் உடல்கள் மற்றும் 7 பேருடைய உருக்குலைந்த உடல் பாகங்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.
 | 

விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் முழுவதும் மீட்பு!

விபத்துக்குள்ளான ஏ.என்.32 ரக விமானப்படை விமானத்தில் பயணம் செய்த 6 பேரின் உடல்கள் மற்றும் 7 பேருடைய உருக்குலைந்த உடல் பாகங்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

கடந்த 3ம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 என்ற விமானம் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மெச்சுக்கா பகுதிக்கு  விமான சிப்பந்திகள் உள்பட 13 பேருடன் பறந்து சென்றது.

புறப்பட்ட சில  நிமிடங்களில் அந்த விமானம் மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அதை தேடும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் அந்த விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 6 பேர்களின் உடல்கள் மற்றும் 7 பேருடைய உருக்குலைந்த உடல் பாகங்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து முழுவதுமாக மீட்கப்பட்டன என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP