குதிரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் சென்றார் குடியரசுத்தலைவர்!

17வது மக்களவை கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் உரையாற்றுவதை முன்னிட்டு குதிரைப்படைகள் அணிவகுக்க பாரம்பரிய முறைப்படி இன்று நாடாளுமன்றம் சென்றடைந்தார்.
 | 

குதிரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் சென்றார் குடியரசுத்தலைவர்!

17வது மக்களவை கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் உரையாற்றுவதை முன்னிட்டு குதிரைப்படை அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி இன்று நாடாளுமன்றம் சென்றடைந்தார்.

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில்,  பாஜக சார்பில் மக்களவை தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஓம் பிர்லா போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார்.

இன்றையதினம் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குதிப்படைகள் அணிவகுக்க பாரம்பரிய முறைப்படி நாடாளுமன்றம் சென்றடைந்தார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். 

இன்றைய கூட்டத்திற்கு பிறகு, அனைத்து கட்சி எம்.பிக்களுக்கும் டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர உணவகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்.பிக்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP