குடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்!

குடியரசுத்தலைவர் மாளிகையை ட்ரோன் மூலம் படம் பிடித்த அமெரிக்காவை சேர்ந்த இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

குடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்!

குடியரசுத்தலைவர் மாளிகையை ட்ரோன் மூலம் படம் பிடித்த அமெரிக்காவை சேர்ந்த இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 14ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்ட்ரபதி பவனை மர்ம நபர் ட்ரோன் மூலம் படம் பிடித்தார். ட்ரோன் மாளிகையை சுற்றி வருவதை கண்ட பாதுகாப்பு படையினர் அதனை சுட முயன்றதையடுத்து, ட்ரோன் பறந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ட்ரோன் மூலம் மாளிகையை படம் பிடித்த இருவரை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த தந்தை, மகன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP