காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - அரசிதழில் வெளியீடு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 திரும்பபெறப்பட்டதற்கான அரசிதழை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது
 | 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - அரசிதழில் வெளியீடு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 திரும்பபெறப்பட்டதற்கான அரசிதழை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் கடந்த 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பபெறப்படுவதாகவும், ஜம்மு- காஷ்மீர் 2 யூனியன் பிரதேங்களாக உருவாக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்படுவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. 

இந்நிலையில், சட்டப்பிரிவு 370 திரும்பபெறப்பட்டதற்கான குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கூடிய அரசிதழை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 370 சட்டப்பிரிவு திரும்பபெறப்பட்டது மத்திய அரசிதழில் வெளியிட்டப்பட்டதால், இனி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகள் எதுவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP