ஆபாச விளம்பரப் பிரியை ரெஹானா பாத்திமா கைது!

ஐயப்ப பக்தராக தன்னைக்காட்டிக் கொண்டு சபரி மலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமியப் பெண்மணி ரெஹானா பாத்திமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

ஆபாச விளம்பரப் பிரியை ரெஹானா பாத்திமா கைது!

ஐயப்ப பக்தராக தன்னைக்காட்டிக் கொண்டு சபரி மலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமியப் பெண்மணி ரெஹானா பாத்திமாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து பெண் செய்தியாளர் கவிதா ஜக்கால், மாடல் அழகியான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ரெஹானா பாத்திமா ஆகியோர் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். இருவரும் சந்நிதானத்துக்கு 500 மீட்டர் வரை சென்று, போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவரான எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா கோவிலுக்கு செல்வதற்கு முன் ஐயப்ப பக்தரைப்போல உடையணிந்து ஆபாசமாக போஸ் கொடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பாத்திமா கோயிலுக்குச் சென்ற அடுத்த நொடியே அவரது வீடு தாக்கப்பட்டது. ரெஹானா குறித்து பல விதமான சர்ச்சைகளும் கருத்துகளும் வெளியாகிவந்தன. அவர் ஆபாச படங்களில் நடித்த வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகின. 

ஆபாச விளம்பரப் பிரியை ரெஹானா பாத்திமா கைது!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், இதுவரை இரண்டு முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். எனினும், எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவது, போராட்டங்களில் கலந்துகொள்வது எனச் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

ஆபாச விளம்பரப் பிரியை ரெஹானா பாத்திமா கைது!

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, ஐயப்ப பக்தர்கள் அணியும் கறுப்பு வேட்டி, சட்டை, மாலை, கையில் ருத்திராட்சம் உள்ளிட்டவற்றுடன் `Thathvamasi' என்ற கேப்ஷனுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.  அந்தப் புகைப்படம், ஐயப்ப பக்தர்களின் மனதை நோகடிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறி, சபரிமலை சம்ரக்ஷன சமிதி என்ற அமைப்பு, பத்தனம்திட்டா மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்தது. 

ஆபாச விளம்பரப் பிரியை ரெஹானா பாத்திமா கைது!

அதனடிப்படையில்,  295A-ன் கீழ் மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதித்தல், மத உணர்ச்சிகளையும் சீர்குலைக்கும் நோக்கத்தோடு கருத்து பதிவிடல் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்தனர். நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வேண்டும் என பாத்திமா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே, இன்று பத்தனம்திட்டா போலீஸார் ரெஹானா பாத்திமாவை கைதுசெய்துள்ளனர்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP