ஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள கல் வீச்சு தாக்குதல் - லோக்சபாவில் கிஷான் ரெட்டி அறிக்க

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு வரையிலான கல் வீச்சு சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் தாக்குதல்கள் பெரிதளவில் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி.
 | 

ஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள கல் வீச்சு தாக்குதல் - லோக்சபாவில் கிஷான் ரெட்டி அறிக்கை!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு வரையிலான கல் வீச்சு சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் தாக்குதல்கள் பெரிதளவில் குறைந்துள்ளதாக லோக்சபா சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி. 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதோடு அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்திருக்கும் மத்திய அரசின் ஆகஸ்ட் மாத உத்தரவை தொடர்ந்து, கடந்த 3 மாதங்களில் 190 கல் வீச்சு வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், சுமார் 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் வரையிலான கல் வீச்சு வழக்குகளை கணக்கிடும் போது 390 வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டதுடன், கடந்த 2016ஆம் ஆண்டு 2,653 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தற்போதைய ஆண்டில் தாக்குதல்கள் பெரிதளவில் குறைந்திருப்பதாக கூறியுள்ளார். 

மேலும், ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் பாதுகாப்பு கட்டுபாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததை தொடர்ந்து, தற்போது அங்கு நிலைமை சீராகி வருவதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வந்த பெற்றோர்களின் அச்சுறுத்தல்கள் நீங்கியதுடன் அனைத்தும் சரியாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP