மீண்டும் இன்று கூடுகிறது சட்டப்பேரவை; குமாரசாமி அரசு தப்புமா?

பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. ஆளுநர் உத்தரவிட்டுள்ளதால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

மீண்டும் இன்று கூடுகிறது சட்டப்பேரவை; குமாரசாமி அரசு தப்புமா?

பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. ஆளுநர் உத்தரவிட்டுள்ளதால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நாள் முழுவதும் நடைபெற்றது. சபாநாயகர் வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், இதுகுறித்து பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதையடுத்து ஆளுநர், "முதலமைச்சர் என்பவர் அவையின் பெரும்பான்மையை பெற்றிருக்க வேண்டும். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாததால், பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையிலே தூங்கினர். இன்று காலை எழுந்து சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏக்கள் வாக்கிங் சென்றனர். அங்கேயே பேரவைக்கு செல்ல தயாராகினர். 

இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கும் நிலையில், ஆளுநர் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP