ஆர்.பி.ஐ, ராகுல் டிராவிட் போல செயல்பட வேண்டும்: ரகுராம் ராஜன் கோரிக்கை!

ரிசர்வ் வங்கி சித்து போல் அல்லாமல் ராகுல் டிராவிட் போல செயல்பட வேண்டும் என ஆர்பிஐ-ன் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட், பொறுமையாக விளையாடி, வலு சேர்ப்பது போல செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
 | 

ஆர்.பி.ஐ, ராகுல் டிராவிட் போல செயல்பட வேண்டும்: ரகுராம் ராஜன் கோரிக்கை!

மத்திய ரிசர்வ் வங்கி கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் போல செயல்பட வேண்டும், சித்து போல் இருக்கக்கூடாது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட், பொறுமையாக விளையாடி, தன் அணிக்கு வலுவான தளம் அமைத்துக் கொடுப்பது போல, ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்' என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பில் இருந்து ரகுராம் ராஜன் நீக்கப்பட்டது முதலே அவர் மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். மேலும், முன்னதாகவே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து மோதல்களும் இருந்து வந்தன. மேலும் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் கேட்ட தொகையை ஆர்.பி.ஐ தராததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்த்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆர்.பி.ஐ, ராகுல் டிராவிட் போல செயல்பட வேண்டும்: ரகுராம் ராஜன் கோரிக்கை!

இந்நிலையில் ரகுராம் ராஜன் இது தொடர்பாக கூறுகையில், "இரு தரப்பினருக்கும் இடையே உள்ள மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். இதனால் இரு தரப்பினரிடமும் பேசி அவரது கருத்துக்களை வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு மத்திய அரசு அதற்கேற்ப செயல்பட வேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசு கூறுவது அனைத்தையும் ஆர்.பி.ஐ கேட்க வேண்டிய அவசியமில்லை. நிதிநிலைமையை கருத்தில் கொண்டே ஆர்.பி.ஐ செயல்பட வேண்டும். ஆர்.பி.ஐ, கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் போல பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். சித்துவைப்போல அதிரடியாக செயல்பட கூடாது' என்றார்.

மத்திய அரசு தான் கார் டிரைவர் என்றால், ரிசர்வ் வங்கி தான் டிரைவரை பாதுகாக்கும் 'சீட் பெல்ட்'. எனவே அந்த சீட் பெல்ட் வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP