ரத்தான தேர்வு செப்.15ல் நடைபெறும்: தபால்துறை

நாடுமுழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப் 15ஆம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.
 | 

ரத்தான தேர்வு செப்.15ல் நடைபெறும்: தபால்துறை

நாடுமுழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப் 15ஆம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தபால்துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

மேலும், மாநிலங்களவையிலும் இது தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த பரப்பரப்பான சூழ்நிலையில், மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். 

இந்நிலையில், ரத்தான தேர்வு வரும் செப்.15ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்தி பேசாதா மாநிலங்களில், அம்மாநில மொழிகளில் வினாக்கள் கொடுக்கப்படும் எனவும் தபால்துறை அறிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP