ராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி சமுதாயத்தினர் குறித்து தவறாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

ராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி சமுதாயத்தினர் குறித்து தவறாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 'மோடிகள் எல்லாம் திருடர்கள்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் என்பவர் ராஞ்சி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில், ராகுல் காந்தி அல்லது ராகுல் தரப்பு வழக்கறிஞர் வரும் ஜூலை 3ம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP