ராம்ஜன்ம பூமி வழக்கு தீர்ப்பு நேரம் : விழிப்புடன் இருங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!!!

உத்திரப்பிரதேசம் : அயோத்தியா வழக்கிற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 17ஆம் தேதியன்று வழங்கப்படவுள்ளதை தொடர்ந்து, விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது மத்திய அரசு.
 | 

அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மேற்கொண்டிருந்த விசாரணை, கடந்த மாதம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அவ்வழக்கிற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 17 ஆம் தேதி வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் அயோத்தியா வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படவுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களையும் விழிப்புடன் இருக்குமாறு கூறியுள்ளது மத்திய அரசு. இதை தொடர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும், முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுரையும் வழங்கியிள்ளது.

ராம்ஜன்ம பூமி வழக்கிற்கான தீர்ப்பு நேரம் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தில், பயங்கரவாதிகளின் நடமாட்டம் தெரிவதாக குறிப்பிட்ட இந்திய புலனாய்வு துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு முயற்சிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP