ரக்ஷா பந்தன் கோலாகலக் கொண்டாட்டம்!

ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி அணிவித்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
 | 

ரக்ஷா பந்தன் கோலாகலக் கொண்டாட்டம்!

ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

ரக்ஷா பந்தன் ஆண்டு தோறும் ஆவணி மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி ஆகும். ராக்கி கட்டியவுடன் அந்த சகோதரிக்கு சகோதரன் பரிசு அளிப்பது வழக்கம். இது வட மாநிலங்களில் முக்கிய பண்டிகையாக கடைபிடிக்கப்படும் நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் பிரபலமாகி வருகிறது. 

அதன்படி இன்று ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரிகள் தனது சகோதரர்களுக்காக கலர் கலரான ராக்கி கயிறுகளை வாங்கி அவர்களது கைகளில் கட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதால், எல்லைகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அப்பகுதியில் உள்ள இளம் பெண்கள் தங்களது சகோதரர்களாக பாவித்து நேற்றைய தினமே ராக்கி கட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடினர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP