Logo

ரஃபேல் போர் விமான வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ராஜ்நாத் சிங்!!!

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையான, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வெகுவாக வரவேற்றுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
 | 

ரஃபேல் போர் விமான வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ராஜ்நாத் சிங்!!!

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையான, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வெகுவாக வரவேற்றுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 36 ரஃபேல் போர் விமானங்களை 58ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்தத்தில் ஏதோ மோசடி நடந்துள்ளது என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டியிருந்ததை தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை இன்று தள்ளுபடி செய்யுமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு.

இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என்று குறிப்பிட்டுள்ள ராஜ்நாத் சிங் அதற்காக தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

 

 

வெளிப்படைத்தன்மையுடன், இந்தியாவின் பாதுகாப்பிற்காக மட்டுமே ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்றும், தேசத்திற்கான பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை இவ்வளவு சந்தேகிப்பது சரியல்ல என்று தன் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர்.

 

 

சில அரசியல் கட்சிகளால், மத்திய அரசின் மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் மனதிற்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அவர்களுக்கு தக்க பதிலடி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

 

மேலும், ரஃபேல் ஒப்பந்தத்தில், மத்திய அரசு மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தியிருந்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் உண்மைதன்மையை விளக்கியுள்ளது உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்றும், மக்களிடம் மத்திய அரசை பற்றிய தவறான கருத்துக்களை முன் வைத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP