ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரான்ஸ் செல்கிறார் ராஜ்நாத் சிங்!

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வரும் ரஃபேல் போர் விமானங்களை வருகிற அக்டோபர் 8ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெறுகிறார். இதற்காக அவர் பிரான்ஸ் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

வருகிற அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறைச் செயலர் ஜெயக்குமார் மற்றும் சில அதிகாரிகள் பிரான்ஸ் சென்று டசால்ட் நிறுவனத்திடம் ரஃபேல் விமானங்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வானது நடைபெற இருக்கிறது.

முன்னதாக, செப்டம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் விமானப்படை தளபதி பிரான்ஸ் சென்று ரபேல் விமானங்களை பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானங்களை இயக்க கூடுதலாக 24 விமானிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP