பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாக்., உடன் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்து வேண்டும் என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேசப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 | 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாக்., உடன் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் அரசுடன் பேசுவதற்கு என்று எதுவும் இல்லை. அப்படி பேசவேண்டுமெனில்  அந்த நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் குறித்து மட்டுமே நான் அந்த நாட்டுடன் பேச வேண்டியுள்ளது என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ஹரியானா மாநிலம் சண்டிகரில் பாஜக சார்பில் தொடங்கப்பட்ட  ஜன் ஆஷிர்வாத் என்று பெயரிடப்பட்டுள்ள தேர்தல் பிரசார யாத்திரையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த தேர்தல் பிரச்சார யாத்திரை ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் பயணம் மேற்கொண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ரோஹ்தக் நகரில்  நடைபெற உள்ள பேரணியுடன் முடிவடைய உள்ளது.

இன்று நடைபெற்ற ஜன் ஆஷிர்வாத் தேர்தல் பிரசார பயணத்தை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய  பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென நமக்கு ஒரு விஷயமும் இல்லை. ஆனால் அந்த நாடு நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி விரும்பினால், பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் குறித்து மட்டுமே பேசவேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.  அந்த மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டேஇதுவரை வழங்கி வந்துள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது எனவும் கூறினார். 

மேலும், இந்தியா தவறு செய்ததாகக் கூறி பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டுவதாக குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திட்டவட்டமாக கூறினார். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாலகோட்டை விட பெரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியபோதே, பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலை அவர் ஒப்பு கொண்டு விட்டதாக ராஜ்நாத்சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP