உலகின் மிக உயரமான யுத்தகளத்தில் ராஜ்நாத் சிங் ஆய்வு!

உலகின் மிக உயரமான யுத்தகளமான சியாச்சின் மலைத்தொடரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தளபதி பிபின் ராவத்துடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
 | 

உலகின் மிக உயரமான யுத்தகளத்தில் ராஜ்நாத் சிங் ஆய்வு!

உலகின் மிக உயரமான யுத்தகளமான  சியாச்சின் மலைத்தொடரில் ஆய்வுப்பணிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  மேற்கொண்டார். அவருடன் ராணுவத் தளபதி பிபின் ராவத்தும் இணைந்து இப்பணியின் மேற்கொண்டுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. கடந்த முறை உள்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜ்நாத் சிங்கிற்கு இந்த முறை பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான யுத்தகளத்தில் ராஜ்நாத் சிங் ஆய்வு!

இதை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இன்று முதலாவதாக சியாச்சின் மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றியதுடன் ராணுவ பாதுகாப்புப் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளையும் மேற்கொண்டார். 

சியாச்சன் மலைப்பகுதியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாதது நாட்டிற்காக தங்களது உயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கும் அங்கு  அவர் மரியாதை செலுத்தினார்.

மேலும், அதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொண்டார். அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணத்தில் ராணுவத் தளபதி பிபின் ராவத்தும் உடன் இருந்து வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP