இந்தியர்கள் அனைவரின் அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் - ராஜ்நாத் சிங் உறுதி!!!

லக்னோ : வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் வீடில்லாத ஒரு இந்தியரை கூட பார்க்க முடியாது என்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தான் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
 | 

இந்தியர்கள் அனைவரின் அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் - ராஜ்நாத் சிங் உறுதி!!!

லக்னோ : வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் வீடில்லாத ஒரு இந்தியரை கூட பார்க்க முடியாது என்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தான் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

உத்திரப்பிரதேச மாநலம் லக்னோ நகரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா வளர்ச்சிக்கான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு இந்தியனின் அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் கூறியுள்ளார். இன்னும் 2 ஆண்டுகளில், இந்தியாவின் கடைசி குடிமகன் வரை அனைவருக்கும் நிச்சயமாக வீடுகள் இருக்கும் என்றும், வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரும், குழாய் நீர் வசதியும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். 

இதை தொடர்ந்து, இந்திய மக்கள் அனைவருக்கும் 5 லட்சம் வரையான மருத்துவ செலவுகள் மத்திய அரசின் நிதிக்குள் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். மேலும், 2019ஆம் ஆண்டின் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெறச்செய்து மத்திய அரசாக ஆட்சியில் அமர வைத்த அனைவருக்கும் தனது நன்றியையும் பதிவு செய்துள்ளார்.

மேலும், இதுவரை அமெரிக்காவை மட்டுமே பார்த்து வந்த முதலீட்டாளர்களை, இந்தியாவை திரும்பி பார்க்க செய்த பிரதமர் மோடிக்கு நன்றி கூறுவதாகவும், இந்தியா பாதுகாப்பான ஒருவரின் கைகளில் உள்ளதாகவும், அவரின் அரவணைப்பினால் இந்தியா சர்வதேச நாடுகளின் முன்பு தலை நிமிர்ந்து நிற்பதாகவும் கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து, தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதே நல்லது என்றும், அதன் மூலம் நம் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை அறிய முடியும் என்றும் கூறியுள்ளார். இறுதியாக இந்தியாவின் மீது மேற்கொள்ளப்படும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றியும் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதம் மூலம் மற்றொரு நாட்டை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கும் நாடு தானாகவே தனது முடிவை சந்தித்து கொள்ளும் என்றும், அதை பற்றிய தேவையற்ற கவலை நமக்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளார். எனினும், இவை அனைத்திலிருந்தும் இந்திய மக்களை பாதுகாக்க மத்திய அரசு இருக்கிறது என்ற உறுதியையும் வழங்கியுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP