Logo

ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புகளுக்கிடையே தொடங்கி நடைபெற்று வருகிறது.
 | 

ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புகளுக்கிடையே தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ராஜஸ்தானில் 49 நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 49 குடிமை அமைப்புகளுக்கான தேர்தலில் மொத்தம் 7,942 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக  சார்பில் 1,166 ஆண்கள் மற்றும் 730 பெண்களும்,  காங்கிரஸ் சார்பில் 778 பெண் வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 33 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் 2100 வார்டு கவுன்சிலர்ளை தேர்ந்தெடுப்பதற்கான நகராட்சி தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 71.53 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதிகபட்சமாக அஜ்மீர் மாவட்டத்தின் சிராபாத் நகராட்சியில் 91.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. உதய்பூர் மாநகராட்சியில் மிகக் குறைந்த வாக்களிப்பு 53 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP