ரபேல் விவகாரம்: தொடர் ட்வீட்டினால் மத்திய அரசை ஸ்தம்பிக்க வைக்கும் ராகுல்!

ரஃபேல் ஒப்பந்தம் ஒரு உலகளாவிய ஊழல். மிக அதிக தூரம் செல்லக்கூடிய ரஃபேல் போர் விமானம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
 | 

ரபேல் விவகாரம்: தொடர் ட்வீட்டினால் மத்திய அரசை ஸ்தம்பிக்க வைக்கும் ராகுல்!

ரஃபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார். 

கடந்த ஏப்ரல் 2015ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு அரசுமுறைப் பயணமாக சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் ரஃபேல் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி, 36 உயர் ரக போர் விமானங்களை பிரான்ஸில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. ரஃபேல் போர் விமானங்களின் உதிரி பாகங்களை இணைப்பது, அவற்றை பராமரிப்பது என்ற பொறுப்பில் அம்பானி நிறுவனம் டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் இணைந்தது. 

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகளவு பட்ஜெட்டில் இந்த ரஃபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அந்த நேரத்தில், அவையிலே நிர்மலா சீதாராமன் ராகுலின் குற்றச்சாட்டை மறுத்தார். 

ரபேல் விவகாரம்: தொடர் ட்வீட்டினால் மத்திய அரசை ஸ்தம்பிக்க வைக்கும் ராகுல்!

பின்னர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, "ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை" என்றார். மேலும் ராகுல் காந்திக்கு அருண் ஜெட்லி சில கேள்விகளையும் முன்வைத்தார். 

இதன் தொடர்ச்சியாக தற்போது ராகுல், அருண் ஜெட்லியிடம் ட்விட்டரில் கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார். 'ரஃபேல் விவகாரத்தில் உங்களின் தலைவர், அவரது நண்பரை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார். ரஃபேல் ஒப்பந்தத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். யோசித்து 24 மணி நேரத்தில் பதில் சொல்லவும்' என குறிப்பிட்டிருந்தார். 

அதைத்தொடர்ந்து, 'நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலளிக்க இன்னும் 6 மணி நேரமே உள்ளது. இளைய இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியையும், அம்பானியையும் ஒப்புகொள்ள வைக்கும் பணியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் ஏன் உங்கள் பேச்சை கவனிக்க வேண்டும். ' என ராகுல் ட்வீட் செய்தார். 

இறுதியாக, தற்போது 'ரஃபேல் ஒப்பந்தம் ஒரு உலகளாவிய ஊழல். மிக அதிக தூரம் செல்லக்கூடிய ரஃபேல் போர் விமானம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பை ஏற்படுத்தும்' என ட்வீட் செய்துள்ளார். 

ரஃபேல் விவகாரத்தில் விசாரணை வேண்டும் என ராகுல் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். அதே நேரத்தில், ரஃபேல் ஒப்பந்தம் ரகசியமானது, அதை வெளியில் பகிர முடியாது என மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP