கருத்து சுதந்திரத்தை மதித்து நடப்பாரா ராகுல்?: பாஜக எம்.பி. கேள்வி

கருத்து சுதந்திரம் பற்றி பாடம் நடத்தும் ராகுல் காந்தி, தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்பட விவகாரத்தில், தான் போதிப்பதை போன்றே செயல்படுவாரா? என பாஜக எம்.பி.யும், நடிகர் அனுபம் கெரின் மனைவியுமான கிரண் கெர் கேள்வியெழுப்பியுள்ளார்.
 | 

கருத்து சுதந்திரத்தை மதித்து நடப்பாரா ராகுல்?: பாஜக எம்.பி. கேள்வி

கருத்து சுதந்திரம் பற்றி பாடம் நடத்தும் ராகுல் காந்தி, தற்போது அதனை மதித்து செயல்படுவாரா? என பாஜக எம்.பி.யும், நடிகர் அனுபம் கெரின் மனைவியுமான கிரண் கெர் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மையமாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" திரைப்படத்தின டிரெய்லர் நேற்று வெளியானது. அதில், கட்சிக்கு  அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கூறி வருகிறது.

மேலும், படத்தை வெளியிடுவதற்கு முன் தங்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்ட வேண்டும் எனவும், சர்ச்சைக்குரிய அனைத்து காட்சிகளையும் நீக்கிய பிறகுதான் இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர்.

இல்லையென்றால், படத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அனுபம் கெரின் மனைவியும், பாஜக எம்.பி.யுமான கிரண் கெர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, " கருத்து சுதந்திரம், பேச்சுரிமை பற்றியெல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார். தான் மற்றவருக்கு போதித்து வரும் இந்த உயர்ந்த விஷயங்களை "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" திரைப்பட விவகாரத்தில் அவர் கடைபிடிக்க வேண்டும்.

"இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு மன்மோகன் சிங் மீது மக்களுக்கு மரியாதை தான் வரும். இந்திய சினிமாவின் போக்கையே மாற்றும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள  இத்திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்று  சாதனைப் படைக்கும்" என அனுபம் கெர் தன்னிடம் கூறியதாக கிரண் கெர் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP