திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
 | 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கப்பெற்ற நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளநிலையில், திகார் சிறையில் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று காலை சந்தித்தனர். 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP