அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன்!

அகமதாபாத் கூட்டுறவு வங்கி முறைகேடு செய்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இன்று அவர் ஜாமீன் பெற்றார்.
 | 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.745.59 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை, குஜராத்தில் உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கி முறைகேடு செய்து மாற்றியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

இதனை எதிர்த்து அந்த வங்கியின் இயக்குனர் அஜய் பட்டேல் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி இன்று முன்ஜாமீன் பெற்றுள்ளார். 

ஜாமீன் பெற்று வெளியே வந்த ராகுல் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். அதிகமாக தாக்கும்போது, அதனை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். ஊழலுக்கு எதிராக போராடுவேன். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP