ராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்: கே.எஸ்.ஈஸ்வரப்பா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளமாட்டார் என கர்நாடக பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 | 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வராவும் இருந்து வருகின்றனர். 

இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர், முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளமாட்டார். அதேபோன்று சித்தராமையாவும் மீண்டும் கர்நாடக முதல்வராக வரமாட்டார்" என கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP