எஸ்.பி.ஜி படையினருக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!!

சோனியா, ராகும் மற்றும் பிரியங்கா காந்திகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையை மத்திய அரசு ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, 28 ஆண்டுகளாக தன்னையும் தன் குடும்பத்தினரையும் பாதுகாத்து வந்த எஸ்.பி.ஜி படையினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி.
 | 

சிறப்பு பாதுகாப்பு படை கடந்த 1985 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியின் மறைவிற்கு பின்பு தொடங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், பிரதமர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு படையாக தான் இருந்து வந்தது எஸ்.பி.ஜி. கடந்த 1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தை தொடர்ந்து, காந்தி குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது காந்தி குடும்பங்களுக்கு எந்த வகையான அச்சுறுத்தலும் இல்லாததை தொடர்ந்து, 3000 பேர் கொண்ட இந்த பாதுகாப்பு படையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, காந்தி குடும்பத்தினரை பாதுகாக்கும் பொறுப்பை இசட் ப்ளஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, தன்னையும் தன் குடும்பத்தினரையும் கடந்த 28ஆண்டுகளாக பாதுகாத்து வரும் சிறப்பு படையை சேர்ந்த தனது சகோதர சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக  ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி.

கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு போடப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு படை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த படை தற்போது பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாக்கும் முக்கிய பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP