மாயாவதி - சோனியா, ராகுல் காந்தி சந்திப்பு ரத்து!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை இன்று மாயாவதி சந்தித்து பேச திட்டமிட்டுருந்த நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜகவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது.  இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்படும் என பரவலாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்கமாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP