ரஃபேல் விமானத்தை தயாரிக்க முழுத் திறன் உண்டு: ஹெச்.ஏ.எல்

ரஃபேல் விமானத்தை தயாரிக்க ஹெச்.ஏ.எல்-க்கு முழுத் திறன் உண்டு என அதன் தலைவர் ஆர். மாதவன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு 36 ரபேல் போர் விமானங்களை வழங்க பிரான்சின் டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
 | 

ரஃபேல் விமானத்தை தயாரிக்க முழுத் திறன் உண்டு: ஹெச்.ஏ.எல்

ரஃபேல் விமானத்தை தயாரிக்க  ஹெச்.ஏ.எல்-க்கு முழுத் திறன் உண்டு என அந்நிறுவனத் தலைவர் ஆர். மாதவன் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறிவிட்டதாகவும், மத்திய அரசு கூறியபடி ரஃபேல் விலை விவரங்கள்  சிஏஜி அல்லது நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவிடம் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை பாஜக ஏற்கெனவே மறுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறன், பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு உள்ளதாக ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவன தலைவர் ஆர். மாதவன் தெரிவித்துள்ளார்.  36 ரபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க பிரான்சின் டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் பொறியாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாதவன், தாங்கள், ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறனை கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP