ரஃபேல் ஒப்பந்தம்:சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்?

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த மத்திய தலைமை தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

ரஃபேல் ஒப்பந்தம்:சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்?

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த மத்திய தலைமை தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவில், " இந்த ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி-யின் அறிக்கை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) பார்வைக்கும், நாடாளுமன்றத்தின் பார்வைக்கும் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்திருந்தது.
ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. 

பிஏசி-யின் தலைவரான  தமக்கு தெரியாமலேயே முக்கியமான இந்த அறிக்கை எப்போது நாடாளுமன்றத்திலும், பிஏசி-யின் பார்வைக்கும் வைக்கப்பட்டதென, பிஏசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து, மத்திய அரசின் அறிக்கை மீதான உச்சநீதிமன்றத்தின் தவறான புரிதல் காரணமாக இந்த குழப்பம் நிகழ்ந்துவிட்டதாகவும், இத்தீர்ப்பை நீதிமன்றம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாஜக கோரியிருந்தது.

இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜியின் அறிக்கை நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP