ரஃபேல் வழக்கு: கோர்ட்டில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை தணிக்கைக் குழுவின் ( சிஏஜி) அறிக்கை, பொது கணக்குக் குழுவின் (பிஏசி) பார்வைக்கு வைக்கப்பட்டதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
 | 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று (சனிக்கிழமை) கூறியபோது:

ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜியின் அறிக்கை, நாடாளுமன்றம் மற்றும் பொது கணக்குக் குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன், அந்த அறிக்கையை இக்குழு ஆய்வு செய்ததாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் சிஏஜிக்கு விரைவில் சம்மன்  அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த அறிக்கை பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எங்கே கிடைக்கப் பெறுகிறதென தெரியவில்லை என்று கார்கே கூறினார்.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP