பிரதமரின் பேச்சை கேட்க பாஜகவினருக்கு ரேடியோ வசதி!

பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி உரையை (மான் -கீ- பாத்) கேட்க வசதியாக, உத்தரகண்ட் மாநில பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் சார்பில் வானொலி பெட்டிகள் (ரேடியோ) இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
 | 

பிரதமரின் பேச்சை கேட்க பாஜகவினருக்கு ரேடியோ வசதி!

பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி உரையை (மான் -கீ- பாத்) கேட்க வசதியாக, உத்தரகண்ட் மாநில பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் சார்பில் வானொலி பெட்டிகள் (ரேடியோ)இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையன்று, அகில இந்திய வானொலியில், மான் -கீ -பாத் (மனதின் வார்த்தைகள்) என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.  இன்று 51 -வது முறையாக அவரது உரை ஒலிபரப்பாகிறது.

அவரது இந்த உரையை கேட்க வசதியாக, உத்தரகண்ட் மாநிலத் தலைநகர்  டேராடூனில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கட்சி நிர்வாகம் சார்பில் ரேடியோக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

கருத்துகளை பகிர்வது, பாடல்கள் கேட்பது, விடியோ பதிவுகளை பார்ப்பது, புகைப்படம் எடுத்து கொள்வது என எல்லாமே இன்று மொபைல்ஃபோன் என்று ஆகிவிட்ட நிலையில், பிரதமரின்  வானொலி உரையை கேட்க  பாஜக தொண்டர்களுக்கு ரேடியோ வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP