பருவநிலை மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் புனே

பருவநிலை மாற்றத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வெள்ளியன்று (இன்று) பேரணி நடக்கவுள்ளது.
 | 

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் புனே

பருவநிலை மாற்றத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வெள்ளியன்று (இன்று) பேரணி நடக்கவுள்ளது.

பருவநிலை மாற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் விளைவுகளை மக்களுக்கு உணர்த்தவும், அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவும், புனேவில் இன்று, "Fridays for Future" என்ற பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

க்ரீடா துன்பர்க் என்ற 16 வயது சிறுமி செய்த செயலின் விளைவே இப்பேரணி நடக்க காரணமாகும். ஸ்வீடனைச் சேர்ந்த க்ரீடா துன்பர்க், கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு, ஸ்வீடன் பாராளுமன்ற வாயிலின் முன் தனி ஆளாக நின்று பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அந்த பெண்ணிற்கு பூமியின் மேலிருந்த அன்பும் நன்றி உணர்வும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இவரை தொடர்ந்து, உலகம் முழுவதும் சுமாராக 2000 நகரங்கள் பருவநிலை மாற்றத்திலிருந்து நமது பூமியை காக்க குரல் கொடுக்க தொடங்கினர்.

"பருவநிலை மாற்றங்களினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும், ஏற்பட போகும் விளைவுகள் அனைத்தையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த முயற்சி" என புனே பேரணியில் பங்கு கொள்ளும் சுதிப் குறிப்பிட்டுள்ளார். 

க்ரீடா துன்பர்க்கின் இந்த செயலை, ஐக்கிய நாடு பாராட்டியதோடு பருவநிலை மாற்றத்தை தடுக்க முனைப்புடன் செயல் படுவோம் என வாக்குறுதி அளித்துள்ளது.

இந்தியாவில், புனே மட்டுமல்லாது, டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 70 நகரங்களில் இந்த பேரணி நடைபெற உள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP