புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் தூண்டுதலில் நடந்தது - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் குற்றச்சாட்டு

புதிய தீவிரவாதிகளை காஷ்மீரில் அவர்களால் சேர்க்க முடியவில்லை; கல்வீச்சு சம்பவங்களும் முழுமையாக தடுக்கப்பட்டுவிட்டன. இதனால், பாகிஸ்தான் விரக்தியடைந்த நிலையில், தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது என்கிறார் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்.
 | 

புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் தூண்டுதலில் நடந்தது - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் 40 வீரர்களை பலி கொண்ட தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் தூண்டுதல் உள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, இந்தத் தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருந்தது. அதுகுறித்த கேள்விக்கு சத்யபால் மாலிக் அளித்த பதில்: 

எத்தனையோ முறை அவர்கள் தேர்வு நடத்தினாலும் புதிய தீவிரவாதிகளை காஷ்மீரில் சேர்க்க முடியவில்லை; கல்வீச்சு சம்பவங்களும் முழுமையாக தடுக்கப்பட்டுவிட்டன. இதனால், பாகிஸ்தான் விரக்தியடைந்த நிலையில், எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தது. அந்நாடு முட்டாள்தனமாக பேசி வருகிறது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மிக வெளிப்படையாக பேரணி நடத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுக்கின்றனர்.

தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் அஞ்சலி நிகழ்வுக்கு நான் செல்லவிருக்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அதில் கலந்து கொள்கிறார். பின்னர், பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார் அவர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP