பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் பேங்க், யுனைடெட் பேங்க் ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 | 

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் பேங்க், யுனைடெட் பேங்க் ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் பேங்க், யுனைடெட் பேங்க் ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுகின்றன. அலஹாபாத் வங்கியுடன் இந்தியன் வங்கி இணைக்கப்படும். கனரா வங்கியுடன், சிண்டிகேட் பேங்க் இணைக்கப்படும். 

வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள். 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 பெரிய வங்கிகளாக செயல்படும். 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபகரமாகவே இயங்கி வருகின்றன. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைய வாய்ப்புள்ளது. யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகியவையும் இணைக்கப்படும் என அறிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP