பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

இந்தியாவின் பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.
 | 

பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

இந்தியாவின் பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. கார்டோசாட் செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பிஎஸ்எல்வி  விண்ணில் பாய்கிறது. 

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. 1,625 எடை கொண்ட கார்டோசாட்-3, புவியிலிருந்து 509 கி.மீ., தொலைவிலான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. புவியைக் கண்காணிப்பதுடன் உயர் தரத்திலான புகைப்படத்தை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது கார்டோசார்-3 செயற்கைக்கோள். 

மேலும், இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP