பிரதமரின் தனிச்செயலர், ஆலோசகர் ஆகியோருக்கு பணிவரையறை குறித்த புதிய அறிவிப்பு! 

பிரதமர் அலுவலகத்தில், பிகே மிஷ்ரா பிரதமரின் தனிச் செயலாலராகவும், பிகே சின்ஹா பிரதமரின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கான பணிகள் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன.
 | 

பிரதமரின் தனிச்செயலர், ஆலோசகர் ஆகியோருக்கு பணிவரையறை குறித்த புதிய அறிவிப்பு! 

பிரதமர் அலுவலகத்தில், பிகே மிஷ்ரா பிரதமரின் தனிச் செயலாலராகவும், பிகே சின்ஹா பிரதமரின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கான பணிகள் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன.

 பிகே மிஷ்ரா பிரதமரின் தனிச் செயலாலராகவும், பிகே சின்ஹா பிரதமரின்  ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், அவர்களுக்கான பணிகள் பிரதமர் அலுவலகத்தால் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் பணிகளும் பிரிக்கப்பட்டன.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு பணிகள் வரையறுத்து வழங்கப்பட்ட நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிற்கு, தேசிய பாதுகாப்பு பணிகள், வெளியறவு துறை அமைச்சகம், வெளிநாட்டு இந்திய விவகாரங்கள், பாதுகாப்பு, விண்வெளி, அணு ஆற்றல், நாட்டின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பணிகள், தேசிய பாதுகாப்பு செயலகம், தேசிய இரசாயன ஆயுதங்கள் துறை, நாகாலாந்து தேசிய சோசியலிச அமைப்புடனான பேச்சு வார்த்தைகள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும்  பிரதமரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த பிகே மிஷ்ரா விற்கு, கொள்கைகளில் ஏற்படும் சிக்கல்களையும், அமைச்சர் அவையின் நியமனக் குழு விவகாரங்கள் மற்றும் அனைத்து நியமன வேலைகள், செயலக அலுவலகத்தின் பணிகள், அமைச்சரவைக் கூட்டத்திற்கு தேவையான விவரங்கள், ஊழல் எதிர்ப்பு பிரிவின் நடவடிக்கைகள், ஏனைய முக்கிய பிரச்சனைகள் என அனைத்தையும் கண்காணிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த பிகே சின்ஹாவிற்கு, அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளின் விஷயங்களை (பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தனிச் செயலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அல்லாத) கண்காணிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பிகே மிஷ்ரா, பிரதமரின் கூடுதல் தனிச் செயலாலராகவும், பிகே சின்ஹா அமைச்சரவை செயலாளராகவும் பணியாற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP