ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நோக்கி சாட்டையை சுழற்ற தயாராகும் பிரதமர் நரேந்திர மோடி!!!

ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தற்போதைய நடிவடிக்கைகளை முழுமையாக மறுஆய்வு செய்த பின்னர், அதன் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் வகையில் சில மாதங்களுக்கு ஒருமுறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு தற்போது வந்துள்ளது பிரதமர் அலுவலகம்.
 | 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நோக்கி சாட்டையை சுழற்ற தயாராகும் பிரதமர் நரேந்திர மோடி!!!

ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தற்போதைய நடிவடிக்கைகளை முழுமையாக மறுஆய்வு செய்த பின்னர், அதன் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் வகையில் சில மாதங்களுக்கு ஒருமுறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு தற்போது வந்துள்ளது பிரதமர் அலுவலகம். 

சமீபகாலங்களாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் குவிந்து வருவதை தொடர்ந்து, அதனை கட்டுபடுத்தும் பணிகளில் சில காலங்களாக ஈடுபட்டு வந்த பிரதமர் அலுவலகம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகள் அனைவரையும் காலாண்டு மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு நடைமுறையை பிறப்பித்திருந்தது.

இதனை தொடர்ந்தும், ஊழல் புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில், ஒவ்வொரு துறைகளிலும், கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்வது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பிரதமர் அலுவலகம், அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக்களை நிர்ணயிப்பது குறித்த முடிவுக்கு வந்துள்ளது. 

தற்போது 1007 அதிகாரிகளின் பதிவுகள் ஆராயப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மீது விசாரணை மேற்கொள்வதற்கான செயல்முறைகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முறைகளையும் ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, மத்திய விழிப்புனர்வு அலுவலகம், 29 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 9வது "ஏ" பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குறித்த விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், "பி" மற்றும் "சி" பிரிவு அதிகாரிகளுக்கான விசாரணைகள் கூடிய விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், தனிப்பட்ட அதிகாரிகள் மீது முன்வைக்கப்படும் குற்றங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில், அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, 50 வயதை எட்டிய அதிகாரகள் அல்லது 30 வருட தகுதிச் சேவையை நிறைவு செய்த அதிகாரிகள் மீது ஏதேனும் ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து வெளியே அனுப்பவும் மத்திய அரசிற்கு உரிமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 14 ரயில்வே அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள், 12 நிலக்கரி அமைச்சக அதிகாரிகள், விமான அமைச்சகத்தை சேர்ந்த 6 அதிகாரிகள் ஆகியோரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஊழல் வரி மற்றும் சுங்க வாரியத்தின் குழு சமீபத்தில் 37 அதிகாரிகளை ஊழலில் ஈடுபட்டிருந்தது தொடர்பாக பணிநீக்கம் செய்ய பிரிந்துரைத்ததாகவும், இது குறித்த விரிவான கலந்துரையாடலில் வரும் நவம்பர் மாத இறுதியில் சுங்க வாரிய அதிகாரிகளுடன் ஈடுபடவிருப்பதாகவும் அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையில், மத்திய அரசின் கட்டுபாட்டிற்குள் வரும் 600 தன்னாட்சி நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதால், அவர்களது பட்டியல்களையும் பார்வையிடவிருக்கிறது பிரதமர் அலுவலகம். 

மேலும், "ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதனை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை பரப்புவதும் ஒவ்வொருவரின் கடமை" என்று ஊழலுக்கு எதிரான தன் கருத்தை முன்வைத்துள்ளார் பிரதமர் மோடி.

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP