நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் காத்திருக்கிறனர்: சந்திரயான்- 2 குறித்து பிரதமர் மோடி ட்வீட்!

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்குவதை பார்ப்பதற்கு நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
 | 

நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் காத்திருக்கிறனர்: சந்திரயான்- 2 குறித்து பிரதமர் மோடி ட்வீட்!

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்குவதை பார்ப்பதற்கு நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

சந்திராயன்- 2 விண்கலம் நாளை (செப். 7) அதிகாலை நிலவின் தென் பகுதியில் தரையிறங்க உள்ளது. திட்டமிட்டபடி சந்திராயன்-2 நிலவின் சுற்றுவட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தெற்குப் பகுதியில் இன்னும் சில மணிநேரங்களில் தரையிறங்க இருக்கிறது. இந்த முக்கியமான தருணத்தை காண்பதற்கு நாட்டின் 130 கோடி மக்களும் காத்திருக்கின்றனர். அதே போன்று மற்ற உலக நாடுகளும் இந்தியாவின் சாதனையை மீண்டுமொரு முறை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்த முக்கியமான தருணத்தை பார்ப்பதற்கு, இஸ்ரோவிற்கு வருகை தருவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோன்று மற்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்களும் இந்த சிறப்பான தருணத்தை காண்பதற்காக என்னுடன் இணைகின்றனர். பூட்டானில் இருந்தும் இளைஞர்கள் சிலர் இதற்காக இங்கு வந்துள்ளனர். 

எனவே சந்திராயன்-2 நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் நிலவை நிகழ்வை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுங்கள். அதனை நான் ரீட்வீட் செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இன்று நள்ளிரவு 1.30 – 2.30 மணிக்கு இடையே நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுகிறது.  தரையிறங்கும் நிகழ்வை பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP