உலகிலேயே பெரிய காப்பீட்டு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

2018ம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ராஞ்சியில் இருந்து இன்று தொடங்கி வைக்கிறாா்.
 | 

உலகிலேயே பெரிய காப்பீட்டு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

 

ஏழைகளுக்கான காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். 

2018ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த திட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ.5 லட்சம் வரையில் ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும். நாட்டின் எந்தவொரு மூலையில் உள்ள மருத்துவமனையிலும் இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள் பயன்பெற முடியும். 

நாடு முழுவதிலும் சுமாா் 15 ஆயிரம் மருத்துவமனைகளில் இருந்து இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அவற்றில் 7,500 விண்ணப்பங்கள் தனியாா் மருத்துவமனைகளில் இருந்து வந்திருப்பதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஏற்படும் மொத்த செலவுத் தொகையில் மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசுகள் 40 சதவிகிதமும் பங்களிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பிரதமர் மோடி இன்று ஜார்கண்டில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். இதுதான் உலகில் பெரிய காப்பீட்டு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP