ராம்ஜன்ம பூமி தீர்ப்பை தொடர்ந்து அமைதி காக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!!!

அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து, இன்று வரை எந்த வகையான போராட்டத்திலும் ஈடுபடாது அமைதி காத்து வரும் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
 | 

இன்று தனது 59வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் தேசிய கேடட் கார்ப்ஸ் மாணவர்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ராம்ஜன்ம பூமி வழக்கில், கடந்த நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, எந்த போராட்டத்திலும் ஈடுபடாது ஒற்றுமையுடன் அமைதி காத்து வரும் அனைத்து இந்தியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கிய அவர், இந்திய பள்ளிகள் அனைத்திலும் தேசிய கேடட் கார்ப்ஸ் அமைப்பில் உள்ள மாணவர்களை, நடைபெறவிருக்கும் "ஃபிட் இண்டியா" நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கோரிக்கையும் முன்வைத்துள்ளார். 

மேலும், வரும் 26ஆம் தேதியுடன் இந்திய அரசியல் சட்டம் நிறுவப்பட்டு 70ஆண்டுகள் முடிவடையும் நிலையில் இது மிகவும் சிறப்பான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP